Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இந்திய டி 20 அணியின் பலவீனம் இதுதான்.. ஓப்பனாக பேசிய ஹர்ஷா போக்ளே!

Advertiesment
இந்தியா
, வெள்ளி, 7 ஜூலை 2023 (09:11 IST)
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சென்று மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாட உள்ளது. நேற்று முன்தினம் டி 20 போட்டிக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஹர்திக் பாண்ட்யா தலைமை தாங்க இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த அணி குறித்து பேசியுள்ள விமர்சகர் ஹர்ஷா போக்ளே “இந்திய அணியின் பந்துவீச்சு கூட்டணி பலமாக இல்லை. இந்திய அணி சமபலம் கொண்ட அணியாக எனக்கு தோன்றவில்லை.  பவுலர்களில் அக்ஸர் படேலை தவிர வேறு யாரும் பேட்டிங் செய்யக் கூடியவர்கள் இல்லை. கண்டிப்பாக அவர் அணியில் இடம்பெறவேண்டும்.

ஆனால் அவர் இடம்பெற்றால் சஹால் அல்லது குல்தீப் யாதவ் ஆகிய இருவரில் யாராவது ஒருவர் பென்ச்சில் உட்காரவைக்கப்படுவார்கள். ஆடும் லெவனில் அர்ஸ்தீப் சிங் மற்றும் ஆவேஸ் கான் அல்லது முகேஷ் குமார் ஆகிய இருவரில் ஒருவர் இடம் பெறவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

100 ஆவது டெஸ்ட்டில் களமிறங்கிய ஸ்மித்தை அவமானப்படுத்திய இங்கிலாந்து ரசிகர்கள்!