Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே எல் ராகுலை 25 கோடி ரூபாய்க்கு வாங்க ஆர்வம் காட்டும் KKR.. !

vinoth
வியாழன், 31 ஜூலை 2025 (13:42 IST)
ஐபிஎல் தொடரில் தொடர்ந்து மிகச்சிறப்பாக ஆடிவரும் பேட்ஸ்மேன்களில் ஒருவர் கே எல் ராகுல். ஐபிஎல் தொடரில் அவரின் சராசரி 45க்கும் மேல். முதலில் பெங்களூர் அணிக்காக ஆடிய அவர் அதன் பின்னர் பஞ்சாய், லக்னோ என மாறி இப்போது டெல்லி அணிக்காக ஆடிவருகிறார்.

இடையில் சில ஆண்டுகள் லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகளுக்குக் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். ஆனால் தற்போது கேப்டன் பதவி வேண்டாம் எனக் கூறி டெல்லி அணியில் ஒரு வீரராக மட்டும் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் அவரை 25 கோடி ரூபாய் கொடுத்து ‘ட்ரேட்’ செய்ய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. அவர் இதற்கு ஒத்துக் கொள்ளும்பட்சத்தில் அவருக்குக் கேப்டன் பதவி கொடுக்கவும் தயாராக உள்ளதாக சொல்லப்படுகிறது. கொல்கத்தா அணி 2024 ஆம் ஆண்டு ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் கோப்பை வென்றது. ஆனால் கடந்த சீசனில் ஸ்ரேயாஸ் ஐயரை ஏலத்தில் விட்டது. இப்போது அந்த அணிக்கு ஒரு கேப்டன் தேவையாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிராட்மேனின் 90 ஆண்டு கால சாதனையை முறியடிக்க வாய்ப்பு.. கில் சாதனை செய்வாரா?

ஐசிசி தரவரிசை: பதினேழேப் போட்டிகளில் உச்சம் தொட்ட அபிஷேக் ஷர்மா!

ஐந்தாவது டெஸ்ட்டில் பும்ரா இருப்பாரா?... ஷுப்மன் கில் கொடுத்த அப்டேட்!

உலக லெஜண்ட் சாம்பியன்ஷிப்… விளையாட மறுத்த இந்தியா… நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் பாகிஸ்தான்!

ஐந்தாவது டெஸ்ட் போட்டி… இங்கிலாந்து அதிரடி மாற்றங்கள்… பென் ஸ்டோக்ஸ் விலகல்!

அடுத்த கட்டுரையில்
Show comments