பிராட்மேனின் 90 ஆண்டு கால சாதனையை முறியடிக்க வாய்ப்பு.. கில் சாதனை செய்வாரா?

Mahendran
வியாழன், 31 ஜூலை 2025 (12:02 IST)
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய 5வது டெஸ்ட் போட்டியில் பிராட்மேனின் 90 ஆண்டு கால சாதனையை முறியடிக்க கேப்டன் கில்லுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது.
 
ஒரு அணியின் கேப்டனாக ஒரு டெஸ்ட் தொடரில் 908 ரன்கள் எடுத்த பிராட்மேனின் சாதனை, 90 ஆண்டுகளுக்கும் மேலாக முறியடிக்கப்படாமல் உள்ளது. 1936 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக பிராட்மேன் இந்த சாதனையை நிகழ்த்தினார். இப்போது, கில் அந்த சாதனையை முறியடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். 
 
இந்த சாதனையை முறியடிக்க கில்லுக்கு இன்னும் 88 ரன்கள் தேவை. கில் தற்போது நான்கு டெஸ்ட் போட்டிகளில் 722 ரன்கள் எடுத்துள்ளார். கடைசி டெஸ்டில் கில் சிறப்பாகச் செயல்பட்டு, தொடரை வெற்றியுடன் முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பிராட்மேன் சாதனையையும் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

முத்துசாமி செஞ்சுரி.. மார்கோ 93 ரன்கள்.. 500ஐ நெருங்கியது தெ.ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்..!

2 நாட்களில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு $3 மில்லியன் இழப்பு..!

ஆஷஸ் முதல் டெஸ்ட்.. ஆஸ்திரேலியா அபார வெற்றி.. 10 வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட ஸ்டார்க்..!

அடுத்த கட்டுரையில்
Show comments