ஐபிஎல் தொடரின் 18 ஆவது சீசன் தொடங்கி மிகச்சிறப்பாக போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் கே கே ஆர் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 200 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் வெங்கடேஷ் சக்ரவர்த்தி அதிகபட்சமாக 60 ரன்கள் சேர்க்க, அங்க்ரிஷ் ரகுவன்ஷி, ரஹானே மற்றும் ரிங்கு சிங் ஆகியோரும் கணிசமான ரன்களை சேர்த்தனர்.
இதையடுத்து ஆடிய சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி மளமளவென விக்கெட்களை இழந்தவண்ணம் இருந்தது. அதிரடி தொடக்கத்துக்கு பேர் போன அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தததால் அந்த அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 120 ரன்கள் மட்டுமே சேர்த்தது.