Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“சில விஷயங்களை தெளிவுபடுத்த வேண்டும்…” கே எல் ராகுல் வெளியிட்ட கடிதம்!

Webdunia
ஞாயிறு, 31 ஜூலை 2022 (16:38 IST)
கே எல் ராகுல் கடந்த சில மாதங்களாக காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறியுள்ளார்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையே டி20 கிரிக்கெட் போட்டி தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட கே எல் ராகுல் கடைசி நேரத்தில் திடீரென விலகினார். அவர் பயிற்சியில் ஈடுபட்ட போது இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியதாக சொல்லப்பட்டது. இதையடுத்து அவர் ஜெர்மனி சென்று அறுவை சிகிச்சை செய்து ஓய்வு எடுத்து இப்போது குணமாகி அணியில் இணைந்துள்ளார்.

இதையடுத்து இந்திய அணியின் அடுத்த தொடரான வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் சேர்க்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்தும் விலகினார்.

இந்நிலையில் இப்போது அவர் ரசிகர்களுக்காக ஒரு கடிதம் வெளியிட்டுள்ளார். அதில் “சில விஷயங்களைப் பற்றி தெளிவுபடுத்த வேண்டும்.  எனது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. நான் அணிக்குள் திரும்ப இருந்த நேரத்தில் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மீண்டும் ஒரு பின்னடைவு. ஆனால் இப்போது நான் உடல்நலம் தேறி வருகிறேன். விரைவில் அணிக்குள் திரும்புவேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025: முதல் வெற்றியை பதிவு செய்தது குஜராத்.. தொடரும் மும்பையின் சோகம்..!

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

அடுத்த கட்டுரையில்
Show comments