மூன்றாவது டெஸ்ட்டில் கே எல் ராகுலுக்கு ஓய்வா?.. இளம் வீரருக்கு வாய்ப்பு!

Webdunia
செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (15:20 IST)
ஆஸி அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து கே எல் ராகுல் நீக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும் துணைக் கேப்டனுமான கே எல் ராகுக் மீது கடும் விமர்சனங்கள் எழும் அளவுக்கு அவரின் பார்ம் உள்ளது. கிட்டத்தட்ட 47 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள அவர் சராசரியாக 33 மட்டுமே வைத்துள்ளார்.

இந்திய தொடக்க ஆட்டக்காரர்களில் இந்தளவுக்குக் குறைவான சராசரி யாருக்கும் இல்லை. இந்நிலையில் முன்னாள் வீரர்கள் சுப்மன் கில் போன்ற திறமையான வீரர்கள் இருக்கும் நிலையில் கே எல் ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அளிப்பது ஏற்புடையதில்லை எனக் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் கடும் விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து மூன்றாம் டெஸ்ட்டில் இருந்து கே எல் ராகுல் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக இளம் வீரர் சுப்மன் கில் சேர்க்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் அணிக்கு தடை விதிக்கிறாதா ஐசிசி? இன்று ஆலோசனை..!

பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வு முடிவு போல் தான் இதுவும்.. சுனில் கவாஸ்கர் கிண்டல்..!

இந்தியா - பாகிஸ்தான் ஃபைனல் வந்தாலும் போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்குமா? கெவின் பீட்டர்சன் கேள்வி

இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறவில்லை என்றால் ரூ.4500 கோடி இழப்பு: ஐசிசி நடவடிக்கை என்ன?

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம்: பாகிஸ்தான்

அடுத்த கட்டுரையில்
Show comments