Publish Date: Tue, 18 Jan 2022 (09:47 IST)
Updated Date: Tue, 18 Jan 2022 (10:07 IST)
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட் இந்த ஆண்டு ஏலத்தில் கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.
இங்கிலாந்து அணியின் நட்சத்திரங்களில் ஒருவரான ஜோ ரூட் அந்த நாட்டு அணிக்காக கூட இருபது ஓவர் போட்டிகளில் அதிகமாக விளையாடுவது இல்லை. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் முதல் முதலாக ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடக்க உள்ள மெகா ஏலத்தில் அவர் கலந்துகொள்ள உள்ளதாக இங்கிலாந்து ஊடகமான ஈவ்னிங் ஸ்டாண்டர்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
webdunia
Publish Date: Tue, 18 Jan 2022 (09:47 IST)
Updated Date: Tue, 18 Jan 2022 (10:07 IST)