Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எந்த அணியும் கேப்டன் பொறுப்பு தரவில்லை… ஏலத்துக்கு வந்த இளம் வீரர்!

Advertiesment
எந்த அணியும் கேப்டன் பொறுப்பு தரவில்லை… ஏலத்துக்கு வந்த இளம் வீரர்!
, செவ்வாய், 18 ஜனவரி 2022 (09:26 IST)
ஸ்ரேயாஸ் ஐயர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் கலந்துகொள்ள உள்ளார்.

டெல்லி அணியில் இடம்பிடித்து சிறப்பாக விளையாடி அந்த அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டவர் ஸ்ரேயாஸ் ஐயர். அவர் தலைமையில் டெல்லி அணி மிக சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டி வரை சென்றது. ஆனால் அடுத்த ஆண்டே கேப்டன் பொறுப்பு ரிஷப் பண்ட் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் அவருக்கும் டெல்லி அணி நிர்வாகத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது.

இதையடுத்து டெல்லி அணி அவரை இப்போது விடுவித்துள்ளது. புதிதாக நுழையவுள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகளில் ஒன்றில அவர் இணைவார் என்றும் அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படலாம் என்று சொல்லப்பட்ட நிலையில் இப்போது அவர் ஏலத்தில் பங்கெடுக்க உள்ளார். ஏனென்றால் அவரை எந்த அணியும் கேப்டனாக நியமிக்க முன்வரவில்லை என்று சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விசா ரத்து செய்யப்பட்டதால் ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறிய ஜோகோவிச்