ஆசியக் கோப்பை தொடரில் நேற்று முன்தினம் இந்திய அணி தங்கள் முதல் போட்டியில் UAE அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணி, இந்திய பந்துவீச்சின் அபார தாக்குதலால் வெறும் 57 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணி 13 ஓவர்கள் மட்டுமே விளையாடியது. அதையடுத்து அந்த எளிய இலக்கை ஐந்தாவது ஓவரிலேயே எட்டி டி 20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த போட்டியில் அபிஷேக் ஷர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இந்த தொடருக்கு முன்பாக வரை அபிஷேக்குடன் சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி வந்தார். ஆனால் தற்போது அவர் ஐந்தாவது இடத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளார்.
இது குறித்துப் பேசியுள்ள முன்னாள் இந்திய பெண்கள் அணி பயிற்சியாளர் W V ராமன் “சஞ்சு சாம்சன் பின் வரிசையில் இறங்குவதில் எந்த பயனும் இல்லை. அவர் முதல் மூன்று இடங்களுக்குள் இறங்க வேண்டும். அப்படி அவர் விளையாடினால் கண்டிப்பாக நம்மால் வெற்றி பெற முடியும்” எனக் கூறியுள்ளார்.