Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் செல்ல மறுத்தார்களா ரெஃப்ரீ ஜகவல் ஸ்ரீநாத் & நடுவர் நிதின் மேனன்?

vinoth
வியாழன், 6 பிப்ரவரி 2025 (09:03 IST)
வரும் 19 ஆம் தேதி தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது. முதலில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பின்னர் பிசிசிஐ மற்றும் ஐசிசி கொடுத்த நெருக்குதால் ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக் கொண்டது. அதனால் இந்தியா அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடத்தப்படவுள்ளன.

இந்நிலையில் தொடர் தொடங்கும் முன் நடக்க இருந்த கேப்டன்கள் போட்டோஷூட்டுக்கு இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மாவை அனுப்ப முடியாது என பிசிசிஐ பிடிவாதமாக இருந்தது. அதனால் இப்போது அந்த போட்டோஷூட் நிகழ்வையே ஐசிசி ரத்து செய்துவிட்டது. தொடக்கவிழா மற்றும் தொடர் தொடங்குவதற்கு மூன்று நாட்கள் முன்னர் நடக்கவுள்ளது.

இந்நிலையில் இந்திய நடுவர் நிதின் மேனும், போட்டி நடத்துனரான ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோரும் சில காரணங்களை பாகிஸ்தான் செல்ல மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஜவகல் ஸ்ரீநாத் தொடர்ந்து பல போட்டிகளில் பணியாற்றியதால் ஓய்வு கோரி இந்த தொடரில் இருந்து விலகிக்கொண்டதாகவும், நிதின் மேனன் தனிப்பட்ட காரணங்களால் விலகுவதாகவும் அறிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இவர்கள் இருவரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பணியாற்ற மாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘நடுவர் பணம் வாங்குகிறார்.. அவரை வேலை செய்ய விடுங்கள்’- சேவாக் விமர்சனம்!

“அஸ்வின் என்னதான் செய்துகொண்டிருக்கிறார்… safe zone-ல் விளையாடுகிறார்”… விமர்சித்த சீக்கா!

‘கிரிக்கெட்டில் எல்லாத்தையும் பாத்துட்டேன் என நினைச்சேன்… ஆனா இது என்னை ஸ்தம்பிக்க வச்சுடுச்சு’- ஹர்ஷா போக்ளே அதிர்ச்சி!

என்னப்பா இது வாங்குன டிக்கெட்ட அதே ரேட்டுக்கு வித்துட்டு இருக்காங்க… சிஎஸ்கே பரிதாபங்கள்!

விராட் கோலிக்கு அடுத்து அந்த மைல்கல்லை எட்டிய ரோஹித் ஷர்மா..!

அடுத்த கட்டுரையில்
Show comments