பேட் கம்மின்ஸ் ஆஸி அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டதில் இருந்து அவர் தொட்டதெல்லாம் வெற்றியாகி வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் கடந்த நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது அவர் தலைமையிலான அணி.
இந்நிலையில் தற்போது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியை வீழ்த்தி பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரையும் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது. இதன் மூலம் அவர் கிரீடத்தில் மேலும் ஒரு சிறகு சூடப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாம் முறையாக WTC இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில் தற்போது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியை வீழ்த்தி பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரையும் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது. இந்நிலையில் இந்த மாதம் தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கும் அவரே ஆஸ்திரேலிய அணியை வழிநடத்துவார் என சொல்லபட்டது. ஆனால் இப்போது காயம் காரணமாக அவர் அந்த தொடரில் பங்கேற்க மாட்டார் என்றும், அவருக்குப் பதில் டிராவிஸ் ஹெட் அல்லது ஸ்டீவ் ஸ்மித் ஆஸி அணிக்கு பொறுப்பேற்கலாம் என சொல்லப்படுகிறது.