Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக டெஸ்ட் அரங்கில் மற்றொரு சாதனை படைத்த ஆண்டர்சன்!

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (08:59 IST)
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆஸ்திரேலிய அணியின் க்ளென் மெக்ராத்தின் சாதனையைத் தகர்த்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வேகப்பந்து வீச்சாளர்களில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார். 40 வய்திலும் டெஸ்ட் போட்டிகளில் ஆர்வமாக விளையாடி வரும் அவர் முடிந்தால் 50 வயது வரை விளையாடுவேன் என அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய அவர் தன் சொந்த மண்ணில் 100 டெஸ்ட் போட்டிகளை விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். 200 போட்டிகளில் விளையாடிய சச்சின் கூட சொந்த மண்ணில் 94 போட்டிகளில் மட்டுமே விளையாடி இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த போட்டியில் 6 விக்கெட்களை வீழ்த்திய அவர் சர்வதேசப் போட்டிகளில் 950 விக்கெட்கள் வீழ்த்தி, அதிக விக்கெட்கள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அவர் 949 விக்கெட்கள் வீழ்த்திய மெக்ராத்தின் சாதனையைத் தகர்த்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

பிரித்வி ஷா மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்… டெல்லி அணி உரிமையாளர் கருத்து!

ஆர் சி பி அணிக்குக் கேப்டனாகிறாரா கோலி?... டிவில்லியர்ஸ் கொடுத்த அப்டேட்!

கொஞ்சம் மசாலா வேணும்ல… ஆஸ்திரேலிய பிரதமரிடம் ஜாலியாக பேசிய கோலி!

குணமாகாத காயம்..? இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் விலகல்?

அடுத்த கட்டுரையில்
Show comments