Publish Date: Fri, 26 Aug 2022 (08:47 IST)
Updated Date: Fri, 26 Aug 2022 (08:59 IST)
இங்கிலாந்து மண்ணில் 100 டெஸ்ட் மேட்ச்களை விளையாடி சாதனைப் படைத்துள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வேகப்பந்து வீச்சாளர்களில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார். 40 வய்திலும் டெஸ்ட் போட்டிகளில் ஆர்வமாக விளையாடி வரும் அவர் முடிந்தால் 50 வயது வரை விளையாடுவேன் என அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி வரும் அவர் தன் சொந்த மண்ணில் 100 டெஸ்ட் போட்டிகளை விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். 200 போட்டிகளில் விளையாடிய சச்சின் கூட சொந்த மண்ணில் 94 போட்டிகளில் மட்டுமே விளையாடி இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
webdunia
Publish Date: Fri, 26 Aug 2022 (08:47 IST)
Updated Date: Fri, 26 Aug 2022 (08:59 IST)