இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்னில் தற்போது நடந்து வருகிறது. இதில் ஐந்தாம் நாளில் இந்திய அணி தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 474 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய இந்திய அணி 369 ரன்கள் சேர்த்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 234 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணி 340 ரன்கள் என்ற இலக்கோடு ஆடிவருகிறது.
இதில் இந்திய அணியின் மூத்த பேட்ஸ்மேன்களான ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தற்போது இந்திய அணி 140 ரன்கள் சேர்த்து 6 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. ஜெய்ஸ்வால் மட்டும் ஒற்றை ஆளாக மறுபுறம் போராடி வருகிறார்.