இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது நடந்து வரும் மெல்போர்ன் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்துக் கலக்கியுள்ள நிதீஷ்குமார். 21 வயதான இந்த வீரர் தற்போது ஒரே நாளில் உலகக் கிரிக்கெட்டின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இந்த போட்டியில் முன்வரிசை ஆட்டக் காரர்கள் சொதப்பிய நிலையில் வாஷிங்டன் சுந்தரோடு கூட்டணி அமைத்து சிறப்பான இன்னிங்ஸை ஆடி அணியை பாலோ ஆனில் இருந்து காப்பாற்றினார். இதையடுத்து இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக நிதீஷ்குமார் வந்துள்ளார் என கருத்துகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் நிதீஷ்குமார் தன் மேல் எழுந்த விமர்சனங்கள் குறித்து பேசும் போது “நான் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இடம்பெற்ற போது பலரும் ஐபிஎல் விளையாடிய சின்ன பையனால் இந்த மாதிரி பெரிய தொடரில் ஒன்றும் பண்ண முடியாது என்ற விமர்சனங்கள். அவர்களுக்கெல்லாம் நான் வலிமையாக பதிலளிக்க வேண்டும் என நினைத்தேன்.” எனக் கூறியுள்ளார்.