இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த தொடரில் இந்திய பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக இருக்கும் பும்ராவுக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வளிக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பும்ரா ஐந்து போட்டிகளிலும் விளையாட மாட்டார் என சொல்லப்பட்டது.
முதல் போட்டியில் இந்திய அணிக்கு தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது மோசமான ஃபீல்டிங்தான். அதிலும் ஸ்லிப் மற்றும் கல்லியில் நின்ற இளம் வீரர் ஜெய்ஸ்வால் நான்கு கேட்ச்களைக் கோட்டைவிட்டார்.
அதனால் அவரை இரண்டாவது போட்டியில் ஷார்ட் லெக் திசைக்கு மாற்றவுள்ளதாக சொல்லப்படுகிறது. பயிற்சியின் போது ஜெய்ஸ்வால் அந்த பொசிஷனில்தான் பயிற்சி மேற்கொண்டார். அவருக்கு பதில் சாய் சுதர்சன்தான் ஸ்லிப் மற்றும் கல்லி பொசிஷனில் பயிற்சி மேற்கொண்டார்.