Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2023; ரிலீரூசோ, டேவிட் வார்னர் அதிரடி பேட்டிங்...பஞ்சாப் அணிக்கு வெற்றி இலக்கு இதுதான்!

Webdunia
புதன், 17 மே 2023 (21:29 IST)
ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில்  பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, டெல்லி அணி 214 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. 

ஐபிஎல் 2023,  16வது சீசன்  தற்போது நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் நிலையில்,  லீக் சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

64 வது லீக் சுற்று ஆட்டத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிட்ல்ஸ் அணி விளையாடுகிறது.

இரு அணிகளும் டாஸ் போட அழைக்கப்பட்ட நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் தவான் டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வுசெய்தார்.

அதன்படி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில்,  கேப்டன் டேவிட் வார்னர் 31 பந்துகளில் 46 ரன்னும், பிரித்வி ஷா 38 பந்துகளில் 54 ரன்னும், ரிலீரூசோ 37 பந்துகளில் 82 ரன்னும் அடித்தனர்.

20 ஓவரில்  2 விக்கெட் இழப்பிற்கு 213  ரன்கள் எடுத்து, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு  214  ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

பஞ்சாப் அணி தரப்பில்,  சாம் குரான் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் ஷர்மாவிடம் பேசி இன்னும் ஐந்து ஆண்டுகள் விளையாட வைக்கவேண்டும்- யோக்ராஜ் சிங் கருத்து!

பும்ரா விஷயத்தில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை… சக பந்துவீச்சாளர் ஆதரவு!

21 வயதில் கேப்டன் பொறுப்பு… சாதனை படைத்த ஜேக்கப் பெத்தெல்!

சிவப்புப் பந்தில் மட்டும் கவனம் செலுத்துங்க… பிசிசிஐ தரப்பிடம் இருந்து ஜெய்ஸ்வாலுக்கு சென்ற அறிவுரை!

இந்தியாவிற்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி: பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments