Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2023; கோலி, பிளசிஸ் அதிரடியால் லக்னோ அணிக்கு இமாலய இலக்கு

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2023 (21:47 IST)
பெங்களூர் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் அடித்து, லக்னோவுக்கு 213 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 15-வது போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் விளையாட இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தது.

எனவே பெங்களூர் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இதில், தொடக்க வீரர்களான விராட் கோலி 61 ரன்களும், பிளசிஸ் 79 ரன்களும் அடித்து வலுனான தொடக்கம் கொடுத்தனர்.

இதையடுத்து, மேகெஸ்மெல் 59 ரன்கள் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில்,  பெங்களூர் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் அடித்து, லக்னோவுக்கு 213 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

லக்னோ அணியின் சார்பில், மார்க் வுட்  மற்றும் மிஸ்ரா தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

தற்போது பேட்டிங் செய்து வரும் லக்னோ அணியில், 1 விக்கெட் இழப்பிற்கு 2.2 ஓவரில் 15 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒருவர் இரட்டை சதம்.. இருவர் சதம்.. ஆஸ்திரேலியா அபார பேட்டிங்.. இலங்கை தடுமாற்றம்..!

பாலிவுட் நடிகையை ‘டேட்’ செய்கிறாரா சிராஜ்?... தீயாய்ப் பரவும் தகவல்!

ஸ்டீவ் ஸ்மித்தான் இந்த தலைமுறையின் சிறந்த டெஸ்ட் வீரரா?... ரிக்கி பாண்டிங் அளித்த பதில்!

ஐசிசி தரவரிசையில் பல இடங்கள் முன்னேறிய திலக் வர்மா!

காவாஜா, ஸ்மித் அதிரடி சதம்.. இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அபாரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments