Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சொதப்பிய கோலி… ஆமைவேகத்தில் பேட் செய்து வெற்றி பெற்ற இந்தியா!

vinoth
வியாழன், 13 ஜூன் 2024 (06:33 IST)
ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று இந்தியா மற்றும் அமெரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறாவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இதையடுத்து முதலில் பேட் செய்த அமெரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 110 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி சார்பாக அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 9 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்களும், அக்ஸர் படேல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து 111 ரன்கள் என்ற எளிய இலக்கோடு களமிறங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் விக்கெட்டை ஆரம்பத்திலேயே இழந்தது. அதன் பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் நிதானமாக விளையாடி 49 பந்துகளில் 50 ரன்களை சேர்த்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷிவம் துபே 31 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி இலக்கை 19 ஆவது ஓவரில் எட்டி வெற்றி பெற்றது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

24 பந்துகளில் 20 டாட் பந்துகள்… ஆப்கானிஸ்தான் சோலியை முடித்த பும்ரா!

சூப்பர் 8 போட்டியில் இந்தியாவுக்கு முதல் வெற்றி.. சூர்யகுமார் யாதவ் அபாரம்..!

வெளிநாட்டு வீரரை தன் பயிற்சியாளர் குழுவுக்குள் இணைக்க ஆசைப்படும் கம்பீர்!

ஜிம்பாப்வே தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு… பிசிசிஐ முடிவு!

கம்பீர் மட்டுமில்லை, இந்த தமிழக வீரரும் விண்ணப்பித்துள்ளாரா? இந்திய அணிக்கு யார் அடுத்த பயிற்சியாளர்?

அடுத்த கட்டுரையில்
Show comments