Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு..! ஏ பிரிவில் முதலிடம் யாருக்கு..!

Siva
புதன், 12 ஜூன் 2024 (20:02 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்தியா மற்றும் அமெரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறாவுள்ளது.
 
இன்றைய போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ள நிலையில் அமெரிக்க அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது
 
ஏ பிரிவில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு அணிகளும் தலா நான்கு புள்ளிகள் எடுத்துள்ளதை அடுத்து இன்றைய போட்டியில் இந்தியா வென்றால் முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்றும் அமெரிக்கா வென்றால் முதல் இடத்தை பிடிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் குறித்த தகவல் இதோ;
 
இந்தியா: ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, அக்சர் பட்டேல், பும்ரா, சிராஜ், அர்ஷ்தீப் சிங்
 
அமெரிக்கா: டெய்லர், ஜஹாங்கீர், ஆண்ட்ரிஸ் கெளஸ், நிதிஷ் குமார், ஆரோன் ஜோன்ஸ், ஆண்டர்சன், ஹர்மீட்சிங், ஷாட்லி ஜஸ்தீப் சிங், ஷரூப் நெட்ராவால்கர், அலிகான்
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜோ ரூட் 150, பென் ஸ்டோக்ஸ் 141.. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து இமாலய ஸ்கோர்..!

பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம்: முன்னாள் வீரர் கருத்து!

சச்சினின் சாதனையை ரூட்டால் முறியடிக்க முடியுமா?... ரிக்கி பாண்டிங் கருத்து!

இனி சச்சின் மட்டும்தான்…வரலாற்று சாதனைப் படைத்த ஜோ ரூட்!

மூன்றாம் நாள் ஆட்டம்: ஜோ ரூட் அபார சதம்… வலுவான நிலையில் இங்கிலாந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments