உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று பாகிஸ்தான் மற்றும் கனடா அணிகள் மோதின. ஏற்கனவே பாகிஸ்தான் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து இருந்ததால் நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலை இருந்தது.
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் முதலில் கனடா அணி பேட்டிங் செய்து 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரரான ஜான்சன் மட்டுமே 52 ரன்கள் எடுத்தார் என்பதும் அதன் பிறகு ஆடிய அனைத்து பேட்ஸ்மேன்களும் சொதப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து 107 என்ற எளிய இலக்கை நோக்கி பாகிஸ்தான் விளையாடிய நிலையில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரிஸ்வான் 53 ரன்களும், கேப்டன் பாபர் அசாம் 33 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 107 என்ற இலக்கை எட்டி பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
இதையடுத்து பாகிஸ்தான் ஏ பிரிவில் புள்ளி பட்டியலில் இரண்டு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பதும் முதல் இரண்டு இடங்களில் இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.