Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விதியை மீறி அடித்த கோல்.. இந்தியாவிற்கு எதிராக நடந்த சதி? – இந்திய கால்பந்து கூட்டமைப்பு கடிதம்!

Indian Football team

Prasanth Karthick

, புதன், 12 ஜூன் 2024 (18:49 IST)
நேற்று நடந்த உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று போட்டியில் இந்தியா – கத்தார் இடையேயான போட்டியில் கத்தார் அணி அடித்த கோல் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.



4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டிகள் உலக கால்பந்து ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்படும் கால்பந்து திருவிழாவாகும். இதில் ஒவ்வொரு முறையும் அர்ஜெண்டினா, பிரேசில் உள்ளிட்ட பல நாட்டு அணிகள் முக்கியத்துவம் வகிக்கும் நிலையில் இந்திய கால்பந்து அணிக்கு தகுதி சுற்றை வென்று உள்ளே செல்வதே பெரும் கனவாக இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றில் கத்தார் – இந்தியா இடையேயான போட்டியில் கத்தார் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றது. ஆனால் கடைசியாக கத்தார் அடித்த கோல் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.


73வது நிமிடத்தில் எல்லைக்கோட்டிற்கு வெளியே சென்ற பந்தை கத்தார் ப்ளேயர் அல் ஹசன் உள்ளே தள்ளிவிட்டதும், அய்மென் அதை கோல் நெட்டில் அடித்தார். விதிகளின்படி அது கோலாக கணக்கு ஆகாது என்ற நிலையில் அதற்கு நடுவர்கள் கோல் என அறிவித்தது இந்திய கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அது கோலா இல்லையா என்பதை கண்டறிய VAR முறையையும் நடுவர்கள் ரிவ்யூ பார்க்க பயன்படுத்தாது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடுவர்கள் கத்தார் அணிக்கு சாதகமாக நடந்து இந்தியாவை பாரபட்சமாக நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. அதை தொடர்ந்து தற்போது இந்த சர்ச்சைக்குரிய கோல் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என இந்திய கால்பந்து கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதம் ஃபிஃபா தலைவர், AFC நடுவர்கள், AFC போட்டி தலைவர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Worldcup T20: புள்ளிப்பட்டியலில் முதலிடம் யாருக்கு? இன்று India vs USA மோதல்!