Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஆண் குழந்தை...ரசிகர்கள் வாழ்த்து

Advertiesment
Bumrah – Sanjana Ganesan
, திங்கள், 4 செப்டம்பர் 2023 (13:42 IST)
இந்திய கிரிக்கெட்  வீரர் பும்ரா –சஞ்சனா கணேசன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஆசியக் கோப்பை தொடர்  தற்போது  இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை அன்று,  இந்தியா பாகிஸ்தான் அணிகள் விளையாடிய போட்டியின் போது மழை குறுக்கிட்டது. மீண்டும் போட்டி தொடங்கிய நிலையில் இந்திய அணி பேட்டிங் முடிந்த பின் மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி ரத்து செய்யப்பட்டது.

இந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து 266 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு கூட்டணியின் நம்பிக்கை நட்சத்திரமான பும்ரா ஆசியக் கோப்பையில் இருந்து தற்காலிகமாக விலகி இந்தியா திரும்பியுள்ளார்.

இந்த நிலையில், ஜஸ்பிரித் பும்ரா, அவரது மனைவி சஞ்சனா கணேசன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதுபற்றி பும்ரா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில்,'' இன்று காலை எங்கள் குழந்தை அங்கத்  ஜஸ்பிரித் பும்ராவை உலகிற்கு வரவேற்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார். அவருக்கு சக கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்னைக்கு ஜெயிச்சா சூப்பர் 4 தகுதி; ஆனா மழை வந்துட்டா..? – IND vs NEP போட்டி என்னாகும்?