Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்னைக்கு ஜெயிச்சா சூப்பர் 4 தகுதி; ஆனா மழை வந்துட்டா..? – IND vs NEP போட்டி என்னாகும்?

Advertiesment
Asia Cup
, திங்கள், 4 செப்டம்பர் 2023 (09:42 IST)
ஆசியக்கோப்பை போட்டியில் இன்று வெற்றி பெற்றால் இந்திய அணி சூப்பர் 4 ஆட்டங்களுக்கு தகுதி பெறும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



ஆசியக்கோப்பை போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணி நேபாள அணியை எதிர்கொள்கிறது. முதலாவதாக பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்திருந்தது. பின்னர் மழை பெய்ததால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந்திய அணி சூப்பர் 4 ஆட்டத்திற்கு தகுதி பெற வேண்டும் என்றால் இன்று நடைபெறும் நேபாளத்திற்கு எதிரான போட்டியில் வெல்ல வேண்டியது அவசியமாக உள்ளது. ஆனால் போட்டி நடைபெற உள்ள பல்லகெலவில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அப்படி மழை பெய்யும் பட்சத்தில் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டாலும் இந்திய அணி முந்தைய ஒரு புள்ளியையும் சேர்த்து சூப்பர் 4-க்கு தகுதி பெறும். நேபாளம் அணி தொடரை விட்டு வெளியேறும்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

128 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து.. நியூசிலாந்து அபார வெற்றி..!