Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 31 March 2025
webdunia

சூப்பர் ஸ்டாருடன் இந்திய வீரர் அஸ்வின் சந்திப்பு

Advertiesment
supert star rajini- Ashwin
, வியாழன், 16 நவம்பர் 2023 (18:00 IST)
இந்தியா, ஆஸ்திரேலியா,  நியூசிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற நிலையில் இந்தியா-   நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி நேற்று  நடைபெற்றது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியைக் காண  முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காம், முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ரிச்சர்ட்ஸ், பிரபல நடிகர் வெங்கடேஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். லதா ரஜினிகாந்த், அனிருத்தின் தந்தை ரவிச்சந்திரன்  ஆகியோர் இப்போட்டியை  நேரில் கண்டுகளித்தனர்.

இதுகுறித்த புகைப்படங்கள் வைரலானது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்தார். இதுகுறித்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நேற்றைய போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திடீரென வந்த மழை.. நிறுத்தப்பட்டது அரையிறுதி போட்டி..!