Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்த மைதானத்தில் ரிலாக்ஸ் ஆக இருக்கவே முடியாது… போட்டிக்குப் பின்னர் பேசிய ரோஹித்!

இந்த மைதானத்தில் ரிலாக்ஸ் ஆக இருக்கவே முடியாது… போட்டிக்குப் பின்னர் பேசிய ரோஹித்!
, வியாழன், 16 நவம்பர் 2023 (07:45 IST)
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதிய முதல் அரையிறுதிப் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 4 விக்கெட் இழந்து 397 ரன்கள் சேர்த்தது. ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கோலி சதமடித்து அசத்தினர். அதன் பின்னர் ஆடிய நியுசிலாந்து அணி 327 ரன்கள் மட்டும் சேர்த்து 70 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த அணியின் டேரல் மிட்செல் அபாராமாக விளையாடி 134 ரன்கள் சேர்த்தார்.

பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் கடைசி வரை நியுசிலாந்து அணியும் இலக்கை துரத்தி போராடியது. அதனால் ஒரு கட்டம் வரை இந்திய அணியும் வெற்றி நம் பக்கம்தான் என நிம்மதியாய் இருக்க முடியாமல்தான் இருந்தது. ஆனால் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக முகமது ஷமியின் பவுலிங் அமைந்தது.

இதுபற்றி பேசிய் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா “இந்த மைதானத்தில் நான் நிறைய போட்டிகளில் விளையாடி வருகிறேன். இந்த மைதானத்தில் விளையாடும் போது நாம் எப்போதும் ரிலாக்ஸ் ஆக இருக்கவே முடியாது. போட்டியின் ஒரு கட்டத்தில் ரசிகர்களே அமைதியாகி விட்டார்கள்.  நாங்கள் பீல்டிங் செய்யும் போது சில தவறுகளை செய்தாலும், ஷமி பவுலிங்கில் அதை ஈடுகட்டினார். இதே வெற்றி டெம்ப்ளேட்டைதான் இறுதிப் போட்டியிலும் தொடர விரும்புகிறோம்” எனக் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இப்படி ஒரு பிட்ச்சில் 7 விக்கெட்களா? அரையிறுதியில் கலக்கிய ஷமி!