இந்தியாவுக்கு எதிரானப் போட்டி… போராடித் தோற்ற ஓமன்!

vinoth
சனி, 20 செப்டம்பர் 2025 (08:45 IST)
இந்தியா மற்றும் ஓமன் அணிகள் மோதிய லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸில் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணியில் அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், அக்ஸர் படேல் மற்றும் திலக் வர்மா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 188 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 56 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து களமிறங்கிய ஓமன் அணி இந்திய அணி பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டது. அந்த அணி 20 ஓவர்களையும் எதிர்கொண்டு நான்கு விக்கெட்களை மட்டுமே இழந்து 167 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் அமீர் கலீம் 64 ரன்களும், ஹம்மத் மிஸ்ரா 51 ரன்களும் அதிகபட்சமாக சேர்த்தனர்.

இந்திய அணி சார்பில் அரைசதம் அடித்த சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த ஹாட்ரிக் வெற்றி மூலம் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலில் இடத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை தூக்கிய பும்ரா

சேட்டன் வந்தல்லோ… கையெழுத்தானது ‘டிரேட்’… சென்னையில் சஞ்சு சாம்சன்!

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

மூன்று ஆண்டுக்கு பின் மீண்டும் ஐபிஎல்-க்கு திரும்பும் வாட்சன்.. எந்த அணியின் பயிற்சியாளர்?

அடுத்த கட்டுரையில்
Show comments