இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்திய அணி 277 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஏற்கனவே பெற்ற முன்னிலையோடு இந்திய அணி இப்போது இங்கிலாந்துக்கு 481 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடிய இங்கிலாந்து அணி தற்போது வரை 3 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. தற்போது இங்கிலாந்த் அணி 3 விக்கெட்களை இழந்து 53 ரன்கள் சேர்த்துள்ளது. இன்னும் அந்த அணியின் வெற்றிக்கு 429 ரன்கள் தேவை.