Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா பாகிஸ்தான் போட்டி… ஒரு கோடி+ பார்வைகள்…. …. ஹாட்ஸ்டாரை ஸ்தம்பிக்க வைத்த ரசிகர்கள்

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (08:37 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியை ஹாட்ஸ்டாரில் 1 கோடிக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ரசிகர்களைக் கொஞ்சம் கூட ஏமாற்றாமல் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது. இந்தியாவின் புவனேஷ் குமார் மிக அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

அதன் பின்னர் ஆடிய இந்திய அணி, கோலி, ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இலக்கை கடைசி ஓவரில் எட்டியது. இந்த போட்டியைக் காண உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக இருந்த நிலையில் போட்டி முடியும் நிலையில் ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் 1.3 கோடி பேர் இந்த போட்டியைப் பார்த்துள்ளனர். இந்த எண்ணிக்கை மற்ற எந்த போட்டிகளை பார்த்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments