Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இங்கு மினிமம் பட்ஜெட்… அங்கு மெஹா பட்ஜெட் – 150 கோடி ரூபாயில் உருவாகும் சமுத்திரக்கனி படம்!

இங்கு மினிமம் பட்ஜெட்… அங்கு மெஹா பட்ஜெட் – 150 கோடி ரூபாயில் உருவாகும் சமுத்திரக்கனி படம்!
, வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (09:07 IST)
இயக்குனர் சமுத்திரக்கனி இப்போது பிஸியான நடிகராகி விட்டார். ஆனாலும் இடையில் படங்களை இயக்கியும் வருகிறார். அந்த வகையில் ஜி 5 ஓடிடி தளத்துக்காக அவர் இயக்கிய படம்தான் விநோயத சித்தம். இந்த படம் அக்டோபர் 13 ஆம் தேதி வெளியாகி பரவலாக பாராட்டுகளைப் பெற்றது.

இதையடுத்து இப்போது இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளார் சமுத்திரக்கனி. தமிழில அவர் நடித்த வேடத்தில் பவன் கல்யாணும், தம்பி ராமையா நடித்த வேடத்தில் முன்னணி நடிகர் ஒருவரும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த படத்துக்கான வேலைகள் தற்போது நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இங்கு சமுத்திரக்கனி விநோதய சித்தம் படத்தை ஓடிடிக்காக மினிமம் பட்ஜெட்டில் இயக்கினார். ஆனால் தெலுங்கில் இப்போது அந்த படத்தை சுமார் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்க உள்ளாராம். பவன் கல்யாண் நடிப்பதால் படத்தை பிரம்மாண்டமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நெகட்டிவ் ரிவ்யூ பயம்… அதிகாலைக் காட்சி இல்லாமல் ரிலீஸ் ஆகும் திருச்சிற்றம்பலம்