Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்ட நேர முடிவில் அடுத்தடுத்து விழுந்த விக்கெட்கள்… பரிதாப நிலையில் இந்திய அணி!

vinoth
வெள்ளி, 27 டிசம்பர் 2024 (13:56 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸி அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட் செய்யப் போவதாக அறிவித்தார்.

ஆஸி அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் நான்கு பேரும் மிகச்சிறப்பான இன்னிங்ஸை ஆடினர். அதில், சாம் கோன்ஸ்டாஸ் 60 ரன்கள், உஸ்மான் கவாஜா 57 ரன்கள், லாபுசாஞ்சே 72 ரன்கள்  ரன்கள் அடித்துள்ளனர். ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் சேர்த்து அசத்தினார். இதன் காரணமாக ஆஸ்திரெலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது. இந்தியா சார்பில் பும்ரா நான்கு விக்கெட்களையும் ஜடேஜா மூன்று விக்கெட்களையும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.

இதையடுத்து இந்திய அணி தற்போது தங்கள் முதல் இன்னிங்ஸை ஆடி வருகிறது. கேப்டன் ரோஹித் ஷர்மா 3 ரன்களிலும் ராகுல் 24 ரன்களிலும் ஆட்டமிழக்க, கோலி மற்றும் ஜெய்ஸ்வால் நிலைத்து நின்று 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால் இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் அடுத்தடுத்து இருவரும் ஆட்டமிழந்தனர். நைட் வாட்ச்மேனாக வந்த ஆகாஷ் தீப்பும் அவுட்டாக இந்திய அணி 5 விக்கெட்களை இழந்து 164 ரன்கள் சேர்த்துள்ளது.  ரிஷப் பண்ட்டும் ஜடேஜாவும் தற்போது களத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவுட் ஆகி வெளியேறிய போது கிண்டல் செய்த ஆஸி ரசிகர்கள்… திரும்பி வந்து முறைத்த கோலி!

கோலியை க்ளவுன் என விமர்சித்து கட்டம் கட்டும் ஆஸி ஊடகங்கள்… கடுப்பான இந்திய ரசிகர்கள்!

ஆட்ட நேர முடிவில் அடுத்தடுத்து விழுந்த விக்கெட்கள்… பரிதாப நிலையில் இந்திய அணி!

ஒற்றை இலக்க ரன்னைத் தாண்ட மறுக்கும் ரோஹித் ஷர்மா… ஓப்பனாராக வந்தும் சொதப்பல்!

ஸ்டீவ் ஸ்மித் அபார சதத்தால் முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் சேர்த்த ஆஸ்திரேலியா…!

அடுத்த கட்டுரையில்
Show comments