Publish Date: Fri, 27 Dec 2024 (08:26 IST)
Updated Date: Fri, 27 Dec 2024 (08:28 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸி அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட் செய்யப் போவதாக அறிவித்தார்.
ஆஸி அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் நான்கு பேரும் மிகச்சிறப்பான இன்னிங்ஸை ஆடினர். அதில், சாம் கோன்ஸ்டாஸ் 60 ரன்கள், உஸ்மான் கவாஜா 57 ரன்கள், லாபுசாஞ்சே 72 ரன்கள் ரன்கள் அடித்துள்ளனர். ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் சேர்த்து அசத்தினார். இதன் காரணமாக ஆஸ்திரெலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது.
இந்திய அணி சார்பாக பும்ரா 4 விக்கெட்களையும், ஜடேஜா 3 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர். ஆகாஷ் தீப் 2 விக்கெட்களையும் வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.