சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நேற்று பாகிஸ்தானில் தொடங்கியது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய நியுசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து இன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடக்கிறது. வலுவான இந்திய அணியை எதிர்த்து பங்களாதேஷ் அணி தாக்குப் பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தொடர்ந்து தோல்வி முகத்தில் சென்ற இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்து அணியை 3-0 என்ற கணக்கில் வொயிட்வாஷ் செய்த புத்துணர்வோடு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட வந்துள்ளது. இந்திய அணியில் நட்சத்திர பவுலர் பும்ரா இல்லாதது ஒரு பின்னடை