Publish Date: Tue, 24 Jan 2023 (14:22 IST)
Updated Date: Tue, 24 Jan 2023 (14:48 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று இந்தூரில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் சற்று முன் போடப்பட்ட டாஸில் நியூசிலாந்து கேப்டன் வெற்றி பெற்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களைக் குவித்து வருகின்றனர்.
இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் சுப்மன் கில் 34 பந்துகளில் அரைசதம் அடித்து சிறப்பாக விளையாடி வருகிறார். இந்திய அணி 12 ஓவர்கள் முடிவில் 97 ரன்கள் சேர்த்து 8 ரன் ரேட்டுக்கு மேல் விளையாடி வருகிறது.