Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மூத்த வீரர்கள் ஐபிஎல் விளையாடலாமா? பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அளித்த பதில்!

Advertiesment
இந்தியா
இந்த ஆண்டு உலகக் கோப்பை தொடர் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் என இரண்டு பெரிய தொடர்கள் அடுத்தடுத்து நடக்க உள்ளன.

ஐபிஎல் தொடருக்கும் உலகக்கோப்பை தொடருக்கும் இடையே மிக குறுகிய கால இடைவெளியே உள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்து அதிக போட்டிகளில் விளையாடுவதால் வீரர்கள் காயம் அடைவது சம்மந்தமாக நேற்று நடந்த பிசிசிஐ கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் முன்னணி வீரர்கள் அதிக ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை தவிர்க்கும் படி ஐபிஎல் உரிமையாளர்கள் மற்றும் என்சிஏ ஆகியோரை இணைந்து கண்காணிக்கும்படி பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் “காயம் குறித்த அச்சம் இல்லாதவர்கள் தாராளமாக ஐபிஎல் தொடரில் விளையாடலாம். டி 20 தொடர்களில் ரோஹித், கோலி மற்றும் கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டதற்கு இதுதான் காரணம்.” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்கள் ஐ.பி.எல். போட்டி.. ரூ.4000 கோடி வருமானம் பெறும் பிசிசிஐ!