காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல்காந்தியிடம் திருமணம் பற்றி கேள்வி எழுப்பட்டதற்கு அவர் பதில் அளித்துள்ளார்.
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, பாரத் ஜடோ என்ற நாடு தழுவிய யாத்திரை நடந்து வரும் நிலையில், யாத்திரை கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரில் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த யாத்திரை ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி, பீகார், பஞ்சாப் வழியே தற்போது காஷ்மீரில் வரை சென்றுள்ளனது.
இந்த யாத்திரை விரைவில் நிறையவடையவுள்ளது. இதன் நிறைவு விழாவில் பல்வேறு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாரத் ஜடோ யாத்திரையின் போது, ராகுல் காந்தியிடம் திருமணம் பற்றியும், அவரது வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டுன்மென ஒரு செய்தியாளார் கேட்கப்பட்டது/.
இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி(520, சரியான பெண் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன் எனவும், என் வாழ்க்கையில் என் பாட்டி இந்தியா தான் என் வாழ்வின் காதல் மற்றும் இரண்டாம் தாய். அவரைப் போன்ற ஒரு பெண் கிடைத்தால் திருமணம் செய்துகொள்வேன்; அவருக்கு பாட்டி மற்றும் என் அம்மாவின் குண நலன்கள் இருந்தால் நல்லது என்று தெரிவித்துள்ளார்.