Publish Date: Sat, 06 Jan 2024 (07:19 IST)
Updated Date: Sat, 06 Jan 2024 (08:00 IST)
ஐசிசி நேற்று துபாயில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையை வெளியிட்டது. அதில் சமீபத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பெற்ற வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 118 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு சென்றுள்ளது. இந்திய அணி 117 புள்ளிகளோடு இரண்டாம் இடத்தில் உள்ளது.
கடந்த சில மாதங்களாக தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை இழந்ததே அதற்குக் காரணம்.
அடுத்த இடங்களில் இங்கிலாந்து - 115 புள்ளிகள் தென்னாப்பிரிக்கா - 106 புள்ளிகள் நியூசிலாந்து - 95 புள்ளிகள் பாகிஸ்தான் - 92 புள்ளிகள் இலங்கை - 79 புள்ளிகள் வெஸ்ட் இண்டீஸ் - 77 புள்ளிகள் வங்கதேசம் - 51 புள்ளிகள் ஜிம்பாப்வே - 32 புள்ளிகள் ஆப்கானிஸ்தான் - 10 புள்ளிகள் அயர்லாந்து - 0 புள்ளி ஆகிய அணிகள் உள்ளன.