Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா..! டி20 போட்டிகள் இன்று தொடக்கம்..!!

Advertiesment
girl cricket

Senthil Velan

, வெள்ளி, 5 ஜனவரி 2024 (13:20 IST)
இந்தியா ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான  முதல் டி20 கிரிக்கெட் போட்டி நவி மும்பையில் இன்று நடைபெறுகிறது.
 
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை இந்திய அணி 1-0 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. 
ALSO READ: வேலை நிறுத்தம் முடிவுக்கு வருமா?.! போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அரசு இன்று பேச்சுவார்த்தை..!!
 
இதைத் தொடர்ந்து நடைபெற்ற 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை ஆஸ்திரேலிய அணி முழுமையாக 3-0 என கைப்பற்றி இந்தியாவை  ஒயிட்வாஷ் செய்தது.
 
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையே மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதன் முதல் போட்டி  இன்று இரவு 7 மணிக்கு நவி மும்பையில் உள்ள டி.ஓய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது. 
 
ஒருநாள் போட்டித் தொடரை இழந்த இந்திய மகளிர் அணி, இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
அதேசமயம், ஒரு நாள் தொடரை போன்று டி20 தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலிய மகளிர் அணி களமிறங்கும் என்பதால் இன்றைய போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அட என்னப்பா இது ரெண்டு டெஸ்ட் வச்சிகிட்டு.. இதெல்லாம் டைம் வேஸ்ட் – ரவி சாஸ்திரி!