Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னைக்கு தோற்றால் சோலி முடிஞ்சது.. வாழ்வா சாவா போராட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ்! – இன்று CSK vs GT மோதல்!

Prasanth Karthick
வெள்ளி, 10 மே 2024 (16:05 IST)
ஐபிஎல் போட்டியில் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக் கொள்கின்றன.



இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 6 வெற்றிகளை பெற்று 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. ப்ளே ஆப் வாய்ப்பை தக்க வைக்க மீதமுள்ள 3 போட்டிகளில் 2 போட்டிகளிலாவது வெல்ல வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் மட்டுமே விளையாடி 8 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இனிவரும்  3 போட்டிகளிலும் குஜராத் அணி தொடர்ந்து வெற்றி பெற்றாலும் கூட ப்ளே ஆப் நுழைவது கடினமான காரியமே. இந்நிலையில் இன்றைய போட்டியில் குஜராத் அணி தோற்றால் மும்பை, பஞ்சாப் அணிகளை தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக 3வது அணியாக குஜராத் டைட்டன்ஸ் வெளியேறும்.

ALSO READ: தோனிக்கு காலில் காயம்.. அதுக்காக எல்லாரும் தோனி ஆகிட முடியாது..! – சிஎஸ்கே பயிற்சியாளர் ப்ளெமிங் பதிலடி!

முன்னதாக இந்த சீசன் தொடங்கியபோதே குஜராத்தை வென்று சென்னை அணி முதல் வெற்றியோடு சீசனை தொடங்கியிருந்தது. அதுவும் 206 இலக்கை நோக்கி பயணித்த குஜராத்தை சென்னை அணி 143ல் அடக்கியிருந்தது.

இதனால் இன்றைய சென்னை – குஜராத் இடையேயான போட்டி மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்சிபி அணியும் கிட்டத்தட்ட வெளியேறிவிட்ட நிலையில் திடீரென தொடர் வெற்றிகளை பெற்று ஃபார்முக்கு வந்தது போல குஜராத்தும் கம்பேக் தருமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LSG vs KKR: நாங்களும் ரவுடிதான்..! போராடி தோற்ற கொல்கத்தா! ரிஷப் பண்ட் நிம்மதி பெருமூச்சு!

LSG vs KKR: Badass மிட்செல் மார்ஷ், மரண மாஸ் நிகோலஸ் பூரன்! LSG அதிரடி ஆட்டம்! - சிக்கலில் KKR!

பாஜகவில் இணைந்த சிஎஸ்கே நட்சத்திர கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ்!

அண்ணன் என்னடா.. தம்பி என்னடா..! ஆட்டம்னு வந்துட்டா! தம்பி டீமை பொளந்து கட்டிய அண்ணன் க்ருனால் பாண்ட்யா!

மேல ஏறி வறோம்.. ஒதுங்கி நில்லு..! வொர்த்து மேட்ச் வர்மா..! - அட்டகாசம் செய்த RCB கோப்பையையும் வெல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments