Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டக் அவுட் ஆனபோதும் நேற்றைய போட்டியில் தோனி படைத்த முக்கிய சாதனை!

Advertiesment
CSK vs PBKS

vinoth

, திங்கள், 6 மே 2024 (15:29 IST)
நேற்று நடந்த முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் மோதிய நிலையில் சென்னை அணி சூப்பர் வெற்றியை பெற்றது. இந்தபோட்டியில் சென்னை அணி முதலில் பேட் செய்து 169 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 139 ரன்கள் மட்டுமே பெற்று 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் சி எஸ் கே அணி பேட் செய்து கொண்டிருந்த போது தொடர்ந்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்போது தோனி இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஷர்துல் தாக்கூர் இறங்கி அவுட் ஆன பின்னர்தான் ஒன்பதாவது வீரராக களமிறங்கினார். இறங்கிய வேகத்தில் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

இப்படி தோனி பேட்டிங்கில் ரசிகர்களை ஏமாற்றினாலும் பீல்டிங்கில் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளார். இதுவரை ஐபிஎல் தொடரில் 150 கேட்ச்கள் பிடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதில் விக்கெட் கீப்பராக 146 கேட்ச்களும், பீல்டராக 4 கேட்ச்களும் அடக்கம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வரட்டா மாமே.. டுர்ர்..! ஐபிஎல்லில் இருந்து விலகும் இங்கிலாந்து வீரர்கள்! – பேச்சுவார்த்தை நடத்தும் பிசிசிஐ!