Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 ஓவரில் டெஸ்ட் மேட்ச் விளையாடுவது எப்படி? கற்றுக் கொடுத்த CSK! - கடுப்பான ரசிகர்கள்!

Prasanth Karthick
சனி, 5 ஏப்ரல் 2025 (19:42 IST)

இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற வாய்ப்பிருந்தும் தோல்வியை தழுவியது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

முதலில் டாஸ் வென்று பேட்டிங் இறங்கிய டெல்லி அணியை சிஎஸ்கே நன்றாகவே ரன்களில் கட்டுப்படுத்தியது. கே.எல்.ராகுல் நிதானமாக ஆடி 77 ரன்களை குவித்திருந்த நிலையில் கேட்ச் பிடித்து அவரது விக்கெட்டை வீழ்த்திய தோனி, அடுத்த பந்திலேயே அபிஷேக் ஷர்மாவையும் ரன் அவுட் செய்தார். 183 ரன்களில் போட்டியை டிசி முடித்த நிலையில் அது சேஸிங் செய்யக்கூடிய இலக்காகவே தெரிந்தது.

 

ஆனால் சென்னை அணி பேட்டிங் இறங்கியது முதலாக வெளிப்படுத்திய மெத்தனமான ஆட்டம் ரசிகர்கள் பலரை கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்று விட்டது. ரச்சின் ரவீந்திரா 6 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து அவுட், நீண்ட நாளாக கேட்டு உள்ளே கொண்டு வரப்பட்ட டெவான் கான்வே 14 பந்துகளுக்கு 13 ரன்கள். ருத்துராஜ் 4 ரன்களில் அவுட். இம்பேக்ட் ப்ளேயராக வந்த ஷிவம் துபே ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என அடித்துவிட்டு 18 ரன்களில் அவுட்டானது ரசிகர்களின் நம்பிக்கையை மேலும் தவிடுப்பொடியாக்கியது.

 

எந்த விதமான அதிரடியும் இல்லாமல் மெல்ல நகர்ந்துக் கொண்டிருந்த மேட்சில் விஜய் ஷங்கர் - தோனி பார்ட்னர்ஷிப் மேலும் ஆமை வேகத்திற்கு நகர்த்தியது. விஜய் ஷங்கர் மட்டுமே இந்த போட்டியின் பாதி ஓவர்களுக்கு (54 பந்துகள்) விளையாடியுமே 69 ரன்களை எடுத்து டெஸ்ட் மேட்ச் அளவில் விளையாடியது ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது. சேஸ் செய்து வெற்றி பெற்றிருக்க வேண்டிய போட்டியை 25 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியிடம் விட்டிருக்கிறது சிஎஸ்கே.

 

சிஎஸ்கே அணியின் ஃபார்ம் அவுட் வெளிப்படையாகவே தெரிவதாக நொந்து கொள்ளும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள், இனி வரும் போட்டிகளிலும் சிஎஸ்கே இப்படி விளையாடினால் ஐபிஎல்லே சுவாரஸ்யம் இழந்துவிடும் என வருந்திக் கொள்கின்றனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் மீது புகார் பதிவு.. கைது செய்யப்படுவாரா?

அஜித் அகார்கர் கூறுவது அபத்தமாக உள்ளது… ஸ்ரேயாஸ் ஐயருக்கு கூடும் ஆதரவு!

ஷுப்மன் கில்லுக்காக சந்தோஷம்… ஆனா ஸ்ரேயாஸுக்காக வருத்தம் – இந்திய அணி தேர்வு பற்றி அஸ்வின் விமர்சனம்!

RCB அணி அதை செய்ய 72 ஆண்டுகள் ஆகும்… நக்கலடித்த அம்பாத்தி ராயுடு!

ஸ்ரேயாஸ் ஐயருக்கு எதிராக செயல்படுகிறாரா கம்பீர்?... ரசிகர்கள் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments