சிஎஸ்கே அணிக்கு டெல்லி கொடுத்த டார்கெட்.. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி கிடைக்குமா?

Mahendran
சனி, 5 ஏப்ரல் 2025 (17:24 IST)
இன்று சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகளுக்கிடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் நிலையில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்துள்ளது. 
 
கே.எல். ராகுல் அபாரமாக விளையாடி 77 ரன்கள் அடித்தார். அவர் ஆறு பவுண்டரிகளும் மூன்று சிக்ஸர்களையும் விளாசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிதாக ஆடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  
 
சிஎஸ்கே பௌலிங் பொருத்தவரையில் கலீல் அகமது இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா, நூர் அகமது பதிரன்னா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டே எடுத்துள்ளனர்.
 
இந்த நிலையில், 184 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்ய உள்ளது. இன்றைய போட்டியில் கான்வே களம் இறக்கப்பட்டுள்ளதால், அவர் ஒப்பனிங் பேட்ஸ்மேனாக ரச்சின் உடன் களமிறங்குவார். அதனையடுத்து ருதுராஜ், விஜய் சங்கர், ஜடேஜா, தோனி உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் இருப்பதால், இந்த இலக்கை எட்டி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் வேண்டாம்.. திருமண ரத்துக்கு பிறகு மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா..

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments