Publish Date: Sat, 05 Apr 2025 (11:28 IST)
Updated Date: Sat, 05 Apr 2025 (11:56 IST)
18 ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 203 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 191 ரன்கள் மட்டும் சேர்த்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இந்த போட்டியில் மும்பை அணி எடுத்த ஒரு தவறான முடிவுதான் அவர்களின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். அது என்னவென்றால் திலக் வர்மா 23 பந்துகளில் 25 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதனால் அவரை 19 ஆவது ஓவரில் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியே அனுப்பிவிட்டு, மிட்செல் சாண்ட்னரை இறக்கினர். இதுதான் கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவை என்ற நிலையில் மும்பை அணிக்கு பின்னடைவாக அமைந்து விட்டது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இதே போட்டியில் ரோஹித் ஷர்மா செய்த ஒரு காரியம் ரசிகர்களை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. முதல் இன்னிங்ஸில் டைம் அவுட்டின் போது நேற்றைய ஆட்டத்தில் விளையாடாத ரோஹித் ஷர்மா மைதானத்துக்குள் வந்து வீரர்களுக்கு சில அறிவுரைகளை சொல்லி சென்றார். அதன் பின்னர் அடுத்த ஓவரிலேயே நிக்கோலஸ் பூரன் விக்கெட் ஆகி வெளியேறினார். ரோஹித்தின் இந்த செயல் ரசிகர்களின் இதயத்தை வென்றுள்ளது.