நேற்று நடைபெற்ற பரபரப்பான போட்டியில் லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 203 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 191 ரன்கள் மட்டும் சேர்த்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இந்த போட்டியில் மும்பை அணி எடுத்த ஒரு முடிவு சர்ச்சைகளையும் விவாதங்களையும் உருவாக்கியுள்ளது. அது என்னவென்றால் இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் திலக் வர்மா 23 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த போது அவரை அவரை 19 ஆவது ஓவரில் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியே அனுப்பிவிட்டு, மிட்செல் சாண்ட்னரை இறக்கினர். திலக் வர்மாவால் நேற்று சரியாக பவுண்டரிகள் அடிக்க முடியவில்லை என்பதாலும் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கத்தோடும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இது குறித்து எழுந்துள்ள விமர்சனங்களில் முக்கியமானது இந்திய வீரர் ஹனுமா விஹரியின் கருத்து முக்கியமானது. குஜராத் அணிக்கெதிரான போட்டியை மும்பை இந்தியன்ஸ் சேஸ் செய்த போது ஹர்திக் பாண்ட்யா 17 பந்துகளில் 11 ரன்கள்தான் அடித்திருந்தார். அப்போது ஏன் அவர் தன்னை ரிட்டயர்ட் ஹர்ட் செய்துகொள்ளவில்லை எனக் கேட்டுள்ளார்.