Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வின்னர் யாருன்னு இப்பவே முடிவு பண்ணியாச்சா? சென்னை சேப்பாக்கம் பேனரால் எழுந்த சர்ச்சை!

Prasanth Karthick
வெள்ளி, 24 மே 2024 (18:55 IST)
இன்று இறுதி போட்டிக்கு முன்பான குவாலிபயர் போட்டி நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே இறுதி போட்டிகளில் மோதிக் கொள்ள போகும் அணிகளுக்கு பேனர் வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



நடப்பு ஆண்டு ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் தேர்வான 4 அணிகளுக்கு இடையேயான குவாலிபயர் போட்டிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் குவாலிபயர் 2 போட்டி நடைபெற உள்ளது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக் கொள்கின்றன.

இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ளும். அந்த இறுதி போட்டியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்தான் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று போட்டி இன்னும் தொடங்காத நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஃபைனல்ஸில் மோதும் அணிகளுக்கு பேனர் வைக்கப்பட்டுள்ளது.

அதில் கொல்கத்தா அணி பேனருக்கு எதிரில் சன்ரைசர்ஸ் பேனர் உள்ளது. ஆனால் இன்று சன்ரைசர்ஸ் அணி ராஜஸ்தானை வெற்றி பெற்றால்தான் இறுதி போட்டிக்கு செல்ல முடியும். அதற்குள் எப்படி சன்ரைசர்ஸ்க்கு பேனர் வைத்தார்கள் என்று ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

யூரோ கால்பந்து போட்டி.. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜெர்மனி.. பெரும் சாதனை..!

ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து ஆடிய ஸ்காட்லாந்து 180 ரன்கள் சேர்ப்பு… ஆஸி தோற்றால் இங்கிலாந்து வெளியே!

அடுத்த கட்டுரையில்
Show comments