கண்ணீரில் மிதக்கிறேன்… அண்ணனைப் பற்றி ட்வீட் செய்த ஹர்திக் பாண்ட்யா!

vinoth
புதன், 4 ஜூன் 2025 (08:59 IST)
17  ஆண்டுகளாக  பட்டம் வெல்லவில்லை என்றாலும் ஐபிஎல் அணிகளிலேயே அதிக ரசிகர்களைக் கொண்ட ஒரு அணியாக ஆர் சி பி அணி உள்ளது. அந்த அளவுக்கு கர்நாடகா தாண்டியும் அந்த அணிக்கு பரவலான ரசிகர் பட்டாளம் உள்ளது. அதனால் உலகம் முழுவதும் உள்ள ஆர் சி பி அணி ரசிகர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்த வெற்றிக்கு மிக முக்கியக் காரணம் இந்தமுறை ஆர் சி பி சமநிலையான அணியை எடுத்தது என்று வல்லுனர்கள் கூறி வருகின்றனர். இத்தனை ஆண்டுகளாக அந்த அணி அதிகளவில் பேட்ஸ்மேன்கள் மேல் மட்டுமே கவனம் செலுத்தி வந்தது. நல்ல பவுலர்களை எடுக்கவில்லை. ஆனால் இம்முறை ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், குருனாள் பாண்ட்யா என தரமான பவுலர்கள் அணிக்குள் இருந்தது அந்த அணிக் கோப்பையை வெல்ல உதவியது.

இந்நிலையில் இறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருது பெற்ற க்ருனாள் பாண்ட்யா பற்றி அவரது சகோதரர் ஹர்திக் பாண்ட்யா பகிர்ந்த பதிவு கவனம் பெற்றுள்ளது. அவரின் புகைப்படத்தைப் பகிர்ந்து “கண்ணீரில் மிதக்கிறேன். பெருமையாக உள்ளது அண்ணா” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோலி அபார சதம்.. ரோஹித் சர்மா அரைசதம்.. 300ஐ தாண்டிய இந்தியாவின் ஸ்கோர்..!

இந்தியா தென்னாபிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்றது யார்? ஆடும் லெவனில் யார் யார்?

12 பந்துகளில் அரைசதம்.. 32 பந்துகளில் சதம்.. அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம்..

மகளிர் பிரீமியர் லீக் 2026 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் ஆர்சிபி - மும்பை மோதல்!

ஆசிய கோப்பை U-19 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. வைபவ் சூர்யவன்ஷி கேப்டன் இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments