Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போராடித் தோற்ற குஜராத் டைட்டன்ஸ்… குவாலிஃபையர் 2 வில் மும்பை இந்தியன்ஸ்!

vinoth
சனி, 31 மே 2025 (08:06 IST)
ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே எலிமினேட்டர் போட்டி நடைபெற்ற நிலையில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி மிக அபாரமாக பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்துள்ளது.   அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா 50 பந்துகளில் 81 ரன்கள் அடித்தார். அவர் 9 நான்கு, சிக்ஸர்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி ஆரம்பத்திலேயே ஷுப்மன் கில்லின் விக்கெட்டை இழந்தாலும் சாய் சுதர்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பாக விளையாடி இலக்கைத் துரத்தினர். ஆனாலும் தேவைப்படும் ரன்கள் அதிகமாக இருந்ததாலும், அவ்வப்போது விக்கெட்கள் விழுந்ததாலும் அந்த அணியால் இலக்கை எட்டமுடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 208 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ரோஹித் ஷர்மா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிஃபையர் 2 க்குத் தகுதிபெற்றுள்ளது. நாளை நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

ஐபிஎல் தொடரில் கலக்கிய க்ருனாள் பாண்ட்யாவுக்கு ஆசியக் கோப்பை தொடரில் வாய்ப்பா?

பாலியல் வழக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கைது.. அணியில் இருந்தும் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments