Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

vinoth
வெள்ளி, 23 மே 2025 (15:09 IST)
அண்மைய நாட்களாக கிரிக்கெட் உலகில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருவது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் திடீர் டெஸ்ட் ஓய்வு முடிவுதான். 36 வயதாகும் அவர் கடந்த வாரம் ஓய்வு முடிவை அறிவித்த போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான ஒன்றாக அமைந்தது. கோலியின் இந்த திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம் என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

ஏனென்றால் கோலியால் இன்னும் நான்கு ஆண்டுகளாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி இருக்க முடியும். தற்போது டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து கோலி ஓய்வு பெற்று விட்டதால் கோலி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். இதன் காரணமாக ஜூன் மாதம் இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் கோலி இல்லாமல் இருப்பது இங்கிலாந்து ரசிகர்களுக்கே உவப்பானதாக அமையவில்லை. அதே போல மற்றொரு மூத்த வீரரான ரோஹித் ஷர்மாவும் ஓய்வை அறிவித்தார்.

இவர்களின் இந்த திடீர் முடிவுக்கு பிசிசிஐ கொடுத்த அழுத்தம்தான் காரணம் என்று சொல்லப்பட்டது. இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் “ஒரு வீரர் விளையாட தொடங்கும் போதே அவர் ஓய்வு பெறுவது என்பது அவரின் தனிப்பட்ட விருப்பம்தான். அதில் தலையிட மற்ற யாருக்கும் உரிமை இல்லை. அது பயிற்சியாளராக இருந்தாலும், தேர்வுக்குழுவாக இருந்தாலும்தான். அது அவர்களுக்குள் இருந்து வரும் முடிவுதான்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாழ்க்கை ஒரு வட்டம்.. சிஎஸ்கேவில் தொடங்கிய பயணம் சிஎஸ்கேவில் முடிந்த்தது.. நன்றி அஸ்வின்..!

ஐபிஎல் போட்டியில் இனி விளையாட மாட்டேன்.. அஸ்வின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

ஃபிட்னெஸுக்கான ‘யோ யோ’ தேர்வில் பங்குபெறும் ரோஹித் ஷர்மா?

ஆஸி முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க்கு தோல் புற்றுநோயா? சிகிச்சைக்குப் பின் பதிவு!

ஆன்லைன் சூதாட்ட செயலிகள் தடை… 200 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments