Webdunia - Bharat's app for daily news and videos

Install App

RCB அணிக்கு மகிழ்ச்சியான செய்தி… அணிக்குள் வரும் முக்கிய வீரர்!

vinoth
வெள்ளி, 23 மே 2025 (11:09 IST)
கடந்த பல சீசன்களாக தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பெங்களூர் அணி, இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரையிலான 13 போட்டிகளில் 8 போட்டிகளை வென்று, ஒரு போட்டியில் முடிவின்றி 17 புள்ளிகளோடு புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இடம்பிடித்து ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளது.

அதனால் இந்த முறை அந்த அணிக் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என யூகிக்கப்படும் நிலையில், அந்த அணிக்கு அடுத்தடுத்துப் பெரும் பின்னடைவுகள் ஏற்படத் தொடங்கியுள்ளன.  ஒரு வார ஒத்திவைப்பதற்குப் பிறகு தற்போது ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கிய போது அந்த அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் தோள்பட்டை வலி காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

அதே போல இங்கிலாந்து வீரர்களான ஜேக்கப் பெத்தல் மற்றும் ஃபில் சால்ட் ஆகியோரும் சர்வதேச தொடருக்காக இங்கிலாந்து சென்றனர். இதற்கிடையில் காயம் காரணமாக கேப்டன் ரஜத் படிதார் விளையாடுவது சந்தேகம் என சொல்லப்பட்டது. ஆனால் இன்று சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரானப் போட்டியில் அவர் விளையாடுவார் என சொல்லப்படுகிறது. ஆனால் கேப்டனாக வழிநடத்துவாரா அல்லது இம்பேக்ட் பிளேயராக மட்டும் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா இங்கிலாந்து தொடரைக் கிண்டலடித்த ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ்!

ஏன் லாரா சாதனையை முறியடிக்காமல் டிக்ளேர் செய்தீர்கள்?.. வியான் முல்டர் அளித்த பதில்!

லாராவின் 400 ரன்கள் சாதனையை நெருங்கிய தெ.ஆ. வீரர்.. திடீரென டிக்ளேர் செய்த கேப்டன்..!

டெல்லி பிரிமியர் லீக் ஏலம்.. சேவாக் மகன், விராத் கோஹ்லி உறவினருக்கு எவ்வளவு?

என் வாழ்க்கையின் சந்தோஷமான தருணமாக இந்த வெற்றி இருக்கும்- ஷுப்மன் கில் பூரிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments