இந்திய கிரிக்கெட் அணி 2011க்கு பிறகு உலகக்கோப்பை போட்டிகளில் வெற்றி பெறாததற்கு தனிநபர் துதி பாடுவதே காரணம் என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணியின் வலிமை குறித்து தொடர் விமர்சனங்கள் உண்டாகியுள்ளது. முக்கியமாக முன்னாள் கிரிக்கெட் வீரரான கவுதம் கம்பீர் இதுகுறித்து பல விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி குறித்து பேசிய அவர் “இந்திய அணி சிறப்பாக செயல்படாமல் போவதற்கு கிரிக்கெட்டில் நிலவும் தனிமனித ஹீரோயிசம் தான் காரணம். மீடியாவும் ஒரு குறிப்பிட்ட நபரையே வெற்றிக்கு காரணம் என மையப்படுத்துகின்றன.
2007 மற்றும் 2011ம் ஆண்டில் உலகக்கோப்பையை இந்தியா வென்றபோது தோனி கோப்பையை வென்றதாக கூறினோம். 1983ல் இந்தியா வென்றபோது கபில்தேவ் வென்றதாக கூறினோம். தனிநபர்கள் கோப்பையை வெல்வதில்லை, இந்திய அணிதான் வென்றது.
கடந்த ஆண்டில் இந்தியாவின் டாப் 6 பேட்ஸ்மேன்களை விட சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடியுள்ளார். ஆனால் அவரை பற்றி அதிகம் பேச மாட்டார்கள். ஏனென்றால் அவருக்கு சமூக வலைதளங்களில் குறைவான ஃபாலோவர்களே உள்ளனர்” என்று பேசியுள்ளார்.